எடாவா : உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் மீண்டும் இணைந்தார் அவருடைய சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவ்.
இதையடுத்து கட்சியில் இருந்து விலகிய ஷிவ்பால், பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார்.
கடந்த, ௧௯௯௬ முதல் தொடர்ந்து ஆறாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ள ஷிவ்பால், அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது அமைச்சராக பணியாற்றிஉள்ளார்.
எடாவா மாவட்டத்தில் மட்டுமல்லாமல் பரவலாக அவருக்கு செல்வாக்கு உள்ளது. சகோதரர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் குடும்பத்துடன் அவர் இணக்கமாக இருந்து வருகிறார்.
முலாயம் சிங் யாதவின் மெயின்புரி லோக்சபா தொகுதிக்கு சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு ஆதரவாக அகிலேஷ் உடன் இணைந்து ஷிவ்பால் யாதவ் பிரசாரம் செய்தார்.
இந்த இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் டிம்பிள் பெரும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஷிவ்பால் பிறந்த ஊரான எடாவா மாவட்டம் சைபாய்க்கு நேற்று அகிலேஷ் யாதவ் சென்றார். சமாஜ்வாதி கட்சிக் கொடியை சித்தப்பாவுக்கு அவர் அளித்தார்.
''சமாஜ்வாதி கட்சியுடன் என்னுடைய கட்சி இணைந்து விட்டது. இனி என்னுடைய காரில் சமாஜ்வாதி கொடி பறக்கவிடப்படும்,'' என, ஷிவ்பால் குறிப்பிட்டார்.