தஞ்சாவூர் : தஞ்சாவூரில், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பின், வழக்கு அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், மாயமான மாணவி, ஈரோட்டில் இருப்பது தெரிந்தது.
போலீசார், ஈரோட்டில் இருந்த மாணவியை மீட்டு, தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர்.
மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர், மானோஜிப்பட்டியை சேர்ந்த பாண்டியன், 25, என்ற ஆட்டோ டிரைவர் திருமணம் செய்வதாக கூறி, அவரை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது.
இதையடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி சுந்தர்ராஜன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாண்டியனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.