தலைவாசல், டிச. 9-
தலைவாசல், வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விழா நடந்தது. பள்ளி தலைவர் அருள்குமார் தலைமை வகித்தார். செயலர் தங்கவேல், பொருளாளர் வெங்காஜலபதி, கல்வி குழு ஆலோசகர் லஷ்மி நாராயணன், இளையப்பன், கூட்ரோடு பழனிவேல், பள்ளி இயக்குனர்கள், முதல்வர் பேசினர்.
'எதிர் நீச்சல்' தலைப்பில் சிறப்பு விருந்தினர் மணி பேசினார். எழுத்தாளர் லேணா தமிழ்வாணனின் வார்த்தைகளுக்கு ஏற்ப 'இனிமையான பழிவாங்குதல்' எனும் கருத்தை மையமாக கொண்டு, 'நம்மை வெறுத்து ஒதுக்குபவர்கள் முன் நான் சாதித்துக் காட்ட வேண்டும்' என, மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக் கூறினார். மாணவர்கள் தனி அங்கீகாரம், அடையாளம் பெற வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் நிலையான முடிவு, விடாமுயற்சி, தொடர் பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம் எனக்கூறி மாணவர்களை வாழ்த்தினார். பள்ளி துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.