திருச்சி:முசிறி அருகே, காரில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறியில், வாகனங்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
டி.எஸ்.பி., முத்தரசு, இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, எஸ்,ஐ., சுரேஷ் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், இதையடுத்து வாள்வேல் புத்துார் சோதனை சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர்.
காரில் கஞ்சா கடத்திய கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய மத்திகிரியைச் சேர்ந்த ஆனந்த் குமார், 22, மஞ்சு ஸ்ரீ நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, 22, மற்றும் முனீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ், 22, ஆகியோரை கைது செய்தனர்.
கஞ்சா கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.