சோழவந்தான்-- குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி பிடித்ததை தொடர்ந்து சோழவந்தான் மாரியம்மன் கோயிலில் அக்கட்சியினர் சிறப்பு பூஜை செய்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். மண்ணாடிமங்கலத்திலும் கொண்டாடினர். மண்டல தலைவர் அழகர்சாமி, துணைத்தலைவர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், பாலகுரு, மணிகண்டன், போஸ், செல்லம்மாள், தசரத சக்கரவர்த்தி, குமரேசன், கனகராஜ், முருகேசன், நாகுச்சாமி, விக்னேஸ்வரன், சங்கரன், முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.