----திருமங்கலம்,--திருமங்கலம் பி.கே.என்., கலை அறிவியல் கல்லுாரியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பில் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' கண்காட்சியை மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் தொடங்கி வைத்தார்.
பி.கே.என்., உறவின்முறை டிரஸ்டி ரமேஷ்பாபு, ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.
பி.கே.என்., வித்யா சாலா சங்க கமிட்டி தலைவர் பார்த்தசாரதி, செயலாளர் பூமண்டலம், பொருளாளர் தனபாலன், இஸ்ரோ ராஜசேகர், ராஜேஷ், மணி, கல்லுாரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயசீலன் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் இந்திய தயாரிப்பு ராக்கெட்களின் மாதிரிகள், அதன் வளர்ச்சிகள், விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு பெட்டகம் போன்றவை இடம்பெற்றுள்ளன.
இக்கண்காட்சி டிச.,11 வரை தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.