மதுரை -மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் மதுரை எஸ்.எஸ்.காலனி 'பெட்கிராட்' நிறுவனத்தில் 4 மாத தையல் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
கம்ப்யூட்டரில் அடிப்படை பயிற்சி, பேஜ்மேக்கர், கோரல் டிரா, போட்டோஷாப், ஆங்கில பேச்சுப்பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சியும், தையலில் பவர் மெஷினில் அனைத்து ஆடை தயாரிப்பு, ஆரி, ஜர்தோஷி, எம்பிராய்டரி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இலவச சீருடை, பாடப்புத்தகத்துடன் ஊக்கத்தொகை வழங்கப்படும். முகவரி : பெட்கிராட், 1ஏ, அருணாச்சலம் தெரு, வடக்குவாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை, அலைபேசி: 89030 03090.