மதுரை,-தொல்லியல் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள சமணர் படுகைகளை பராமரிக்க தமிழக அரசு ரூ.3 கோடி ஒதுக்கியுள்ளது.அதில் மதுரையில் 5 இடங்கள் பராமரிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. தற்போது யானைமலை, திருவாதவூர், மீனாட்சிபுரத்தில் சமணர்படுகை பகுதியில் சோலார் மின்விளக்குகள், குடிநீர், கழிப்பறை அமைக்கும் பணி நடக்கிறது. அடிப்படை வசதிகளுடன் செக்யூரிட்டி அறையும் தயாராகிறது.
யானைமலையில் தீர்த்தங்கரர் சிலையை சுற்றி வேலியும், திருவாதவூரில் மலையைச் சுற்றி பாதுகாப்பு வேலியும் அமைக்கப்படுகிறது. அடுத்து அரிட்டாபட்டி, விக்கரமங்கலத்தில் வேலை நடக்க உள்ளது.