மதுரை-மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில்மாவட்ட அளவிலானகிரிக்கெட் லீக் போட்டிகள் ஒய்.எம்.சி.ஏ., மைதானம், நல்லமணி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
முதல் டிவிஷன்போட்டி முடிவுகள்
டி.வி.எஸ். கிளப் அணி 43.3 ஓவர்களில் 187 ரன் எடுத்தது. கலீல் ரகுமான் 44, அரவிந்த் 36 ரன் எடுத்தனர். கமலேஷ் 5 விக்கெட் எடுத்தார். அடுத்து ஆடிய ப்ரீக் அணி 38.3 ஓவர்களில் 110 ரன்னுக்கு சுருண்டது. மீனாட்சிசுந்தரம் 47, ரவி 25, அஜய் 25 ரன் எடுத்தனர். அஸ்வத் 6 விக்கெட் வீழ்த்தினார்.
மீகா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்தது. சந்தோஷ்குமார் 58, சிவதேவன் 50, முருகன் 42, சந்தோஷ் கோபி 30 ரன் எடுத்தனர்.மாதவன் 5 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய எஸ்.பி.ஓ.ஏ., அணி 25 ஓவர்களில் 105 ரன்னில் தோற்றது. சதீஷ்குமார் 5, முருகன் 3 விக்கெட் வீழ்த்தினர்.