ஆத்துார்: பூச்சிக்கொல்லி மருந்து ஆலைக்கு மின்வாரிய அலுவலர்கள் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்வதை கண்டித்து தீக்குளிப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மின்வாரிய அலுவலர்கள் நேற்று ஆலைக்கு வந்தனர். இதனால் ஆலை முன் மின்வாரிய அலுவலர்களை கண்டித்து, மக்கள், விவசாயிகள் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தினர்.
அப்போது, 'ஆலை சார்பில் மின் இணைப்புக்கு மனு அளித்ததால் அதற்கான பணி குறித்து ஆய்வு நடந்தது. மின் இணைப்பு எதுவும் வழங்கப்படவில்லை' என, போலீசார் உறுதியளித்தனர். இதனால் விவசாயிகள், மக்கள் கலைந்து சென்றனர்.