சேலம்: சேலம் மாவட்டத்தில், 'மாண்டஸ்' புயல் தாக்கத்தால், நேற்று முன் தினம் இரவு ஆங்காங்கே விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. அத்துடன் குளிர் காற்றும் வீசியது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கெங்கவல்லியில், 13.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
தம்மம்பட்டி, 6, ஏற்காடு, 2.2, காடையாம்பட்டி, 2, இடைப்பாடி, சேலம் தலா, 1.6, மேட்டூர், சங்ககிரி தலா, 1.2, ஆத்துார், கரியகோவில், ஆணைமடுவில் தலா, ஒரு மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரியன் தென்படவில்லை. அத்துடன் ஆங்காங்கே சாரல் மழையுடன் குளிர்காற்று வீசியது.
நேற்றைய வெப்பநிலை, 18.7 செல்சியஸ். இது இயல்புக்கு, 2 செல்சியஸ் குறைவு. மழையால் 2ம் நாளாக, சேலம் மாவட்டத்தில் இன்றும், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவித்து, கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.