ஆத்துார்: சீரான குடிநீர் வினியோகிக்கக்கோரி, ஆத்துார் நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
ஆத்துார் நகராட்சி, 19வது வார்டில் ராமலிங்க வள்ளலார் தெரு, முருகர் தெரு, ஜீவரத்தனம் தெரு, அப்பாயி தெரு உள்ளிட்ட பகுதிகளில், 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், நேற்று, ஆத்துார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா பேச்சு நடத்தினார். அப்போது மக்கள், 'ஆழ்துளை கிணறு, பொது கிணறுகளில் இருந்து வினியோகிக்கும் தண்ணீர் சரவர வருவதில்லை. இதுகுறித்து, தி.மு.க.,வை சேர்ந்த, 19வது வார்டு கவுன்சிலர் அருணாவிடம் கூறியபோது, நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்துள்ளதாக கூறினார். பின், எந்த நடவடிக்கையும் இல்லை' என்றனர்.
இதையடுத்து சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக, நிர்மலா பபிதா கூற, மக்கள் கலைந்து சென்றனர்.