சேலம்: சேலம், ஈரோடு வழியே இயங்கும் வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி வார ரயில் இயக்கம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவா மாநில ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி வழியே, வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு, டிச., 12, 19ல் இயக்கப்படவிருந்த வார ரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் டிச., 13, 20ல், வேளாங்கண்ணியில் இருந்து வாஸ்கோடகாமாவுக்கு இயக்கவிருந்த ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.