நாகர்கோவில் : அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில், தாயும், குழந்தையும் இறந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே சரல் விளையைச் சேர்ந்தவர் ஜோஸ் மனைவி ஜாஸ்மின், 30. இந்த தம்பதிக்கு, 5 வயதில் மகன் உள்ளார்.
இரண்டாவது பிரசவத்திற்காக திங்கள்சந்தையில் தனியார் மருத்துவமனையில் ஜாஸ்மின் சிகிச்சை பெற்று வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான நிலையில், பரிசோதித்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள், வேறு மருத்துவமனைக்கு செல்லும் படி கூறினர்.
உடனடியாக நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டு, இறந்த நிலையில் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் உடல்நிலை மோசமாகி ஜாஸ்மினும் இறந்தார்.
திங்கள்சந்தையில் தனியார் மருத்துவமனை தான் தாய், குழந்தை இறப்புக்கு காரணம் என, உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.