துாத்துக்குடி:பட்டா மாற்றத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு, இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம், பேரூரணி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சுப்பையா, 65. இவரிடம், 2010 அக்., 11ல், துாத்துக்குடி, கிப்ட்சன் புரத்தைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன், 67, என்பவர் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
அதற்கு சுப்பையா, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
துாத்துக்குடி நீதிமன்றத்தில், 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், சுப்பையாவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.