தியாகதுருகம்-தியாகதுருகம் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் சந்தைமேடு மற்றும் பி.டி.ஓ., அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஸ்டாலின், மணி தலைமையிலான போலீசார் தனி தனியாக அப்பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் வீட்டில் மதுபாட்டில் விற்பனை செய்த பெரியமாம்பட்டை சேர்ந்த செல்வம்,57; சந்தைமேடு த சங்கர்,52; ஆகியோரை போலீசார் பிடித்து கைது செய்து, அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.