கள்ளக்குறிச்சி-நெஞ்செரிச்சல், மயக்கம் ஏற்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் தமிழரசன்,32; இவருக்கு கடந்த 23ம் தேதி இரவு 11 மணியளவில் திடீரென நெஞ்சு எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடன் அவரது குடும்பத்தினர் தமிழரசனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி தமிழரசன் இறந்தார்.
புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் விசாரிக்கின்றனர்.