கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி தர்மசாஸ்தா கோவில் கும்பாபிேஷகம் நாளை(27 ம் தேதி) நடக்கிறது. கள்ளக்குறிச்சி காந்தி ரோடில் உள்ள ஸ்ரீதர்மசாஸ்தா கோவில் கும்பாபிேஷகம் மூன்றாவது முறையாக நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை கணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், நவகிரக ேஹமம் நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு யாகசாலை பிரவேச பூஜைகள் நடந்தது.
இன்று காலையும், மாலையும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. நாளை(27 ம் தேதி) காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்னியாகவஜனம், சூரிய பூஜை, வேதிகா அர்ச்சனை, மூலமந்திர யாகங்களுக்கு பின் காலை 10 மணிக்கு விமான கும்பாபிேஷகம், 10.15.மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள தர்மசாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.