கள்ளக்குறிச்சி: பைத்தந்துறை அரசு தொடக்க பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை அரசு தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி முத்துசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜூ, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, சின்னசேலம் வட்டார கல்வி அலுவலர் கென்னடி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் முத்தமிழ் கலைக்கூடம் திறப்பு, இடைநிலை ஆசிரியர் கோவிந்தராசுக்கு பணி நிறைவு பாராட்டு நிகழ்ச்சி மற்றும் ஆண்டு விழா நடந்தது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், போட்டிகள் மற்றும் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
அப்போது, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் ரூ.37,500 மதிப்புள்ள ப்ரொஜக்டர் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ், ஆசிரியர் பயிற்றுநர் ரவிக்குமார், ஆசிரியர்கள் முனியன், லட்சுமி, ராமச்சந்திரன் பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.