கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளதால் 660 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்த, எஸ்.பி., மோகன்ராஜ் மேற்பார்வையில் ஒரு ஏடி.எஸ்.பி., தலைமையில், மாவட்டம் முழுவதும் 2 டி.எஸ்.பி.,க்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், 113 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 525 காவலர்கள் என மொத்தம் 660 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
குடியரசு தினத்தன்று மாவட்டத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அனைத்து நகர முக்கிய சாலைகளிலும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து காவல்நிலையங்களிலும் பகல், இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கலெக்டர் தலைமையில் குடியரசு தின விழா நடக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.