தர்மபுரி, ஜன. 26-
குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில், குடியரசு தின விழாவை, பாதுகாப்பாக கொண்டாடும் வகையில், தர்மபுரி மாவட்ட ரயில்வே போலீசார், தர்மபுரி, தொப்பூர், சிவாடி, பாலக்கோடு உட்பட உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், தர்மபுரி வழியாக வந்து செல்லும் அனைத்து ரயில்கள் மற்றும் பயணிகளிடம் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில், எஸ்.ஐ., கோதண்டபானி தலைமையிலான போலீசார் நேற்று, ரயில்கள் மற்றும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
இதே போன்று இன்றும் தர்மபுரி வழியாக வந்து செல்லும் அனைத்து ரயில்களில், ரயில் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளனர்.