கரூர், ஜன. 26-
கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும், 16,908 மாணவ, மாணவியருக்கு வினா -விடை புத்தகம் வழங்கப்பட உள்ளது என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவியருக்-கு வினா - -விடை புத்தகம் வழங்குதல், 'ஆங்கில நண்பன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். விழாவில், மாணவியருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில், 6 முதல், பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்து, உயர்கல்வி செல்வதற்கு உதவும் 'புதுமைப்பெண்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும், 16,908 மாணவ, மாணவியருக்கு வினா - விடை புத்தகம் வழங்கப்படுகிறது. மாவட்டம் நிர்வாகம் சார்பில் 'உதிரம் உயர்த்துவோம்' என்ற மகத்தான பணியை முன்னெடுத்திருக்கின்றனர். நம் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதனால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., லியாகத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சந்தோஷ்குமார், தலைமையாசிரியை கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.