குளித்தலை, ஜன. 26-
குளித்தலை கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.
முன்னதாக, வக்கீல் சங்கம் சார்பில் நீதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோர்ட்டில் உள்ள கோப்புகளை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தார். அதன் பிறகு நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. வக்கீல் சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். சப்-கோர்ட் நீதிபதி சண்முககனி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன், ஜே.எம்., 1 மற்றும் 2 நீதிபதிகள் தினேஷ்குமார், பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், குளித்தலை கோர்ட் வளாகத்தில் கேன்டீன், லிப்ட் வசதி அமைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதில், அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் சுதா, வக்கீல் சங்க பொறுப்பாளர்கள், கோர்ட் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.