குளித்தலை, ஜன. 26-
குளித்தலையை அடுத்த அய்யர்மலை டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லுாரியில் மாணவ, மாணவியர் சார்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் கலியமூர்த்தி கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். இதில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் வழியாக சிவாயம் நெடுஞ்சாலையில் சென்று, தெப்பக்குளம் வழியாக பஞ்., மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு முடிவடைந்தது.
பேரணியில், தேர்தல் துணை தாசில்தார் சுதா, மண்டல துணை தாசில்தார் வைரப்பெருமாள், ஆர்.ஐ.,ஸ்ரீவித்யா, கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
இதேபோல், தோகைமலை செர்வைட் கல்லுாரி மாணவியர் சார்பில் விழிப்புணர்வு பேரணி தோகைமலை பஸ் ஸ்டாண்டில் தொடங்கி, திருச்சி, மணப்பாறை நெடுஞ்சாலை வழியாக மீண்டும் பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது. இதில் கல்லுாரி முதல்வர், துறை தலைவர்கள் மாணவியர் கலந்து கொண்டனர்.