நாமக்கல், ஜன. 26-
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, திருச்சி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்ட, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வடமாநில வாலிபர்கள் இருவரை கைது செய்தனர்.
நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில், போலீசார், நாமக்கல்-திருச்சி சாலை, நல்லுார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ரொனால்டு 'டஸ்டர்' காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், காரில் மூட்டை, மூட்டையாக,
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் இருந்து இரு வாலிபர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பூபேந்திரசிங், 24, பிரேமாராம்,28, என்பதும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து, திருச்சி மாவட்டத்துக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், காரையும், காரில், 25 மூட்டைகளில் இருந்த, 300 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல்
செய்தனர். அவற்றின் மதிப்பு, 3 லட்சம்
ரூபாய். இது தொடர்பாக, வழக்கு பதிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்து
கின்றனர்.
கடந்த, 8 ல், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, திருச்சிக்கு காரில் கடத்தி வரப்பட்ட, 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 252 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட, ராஜஸ்தான் மாநிலம், ஜலுார் மாவட்டம், புர் தாலுகா, குரேடா கி தாணியை சேர்ந்த சுரேஷ், 32 என்பவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் இருந்து, புகையிலை பொருட்கள், தமிழகத்துக்குள் கடத்தி வரும் செயலில், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு கடத்தி வருபர்களை, தமிழக எல்லையில் கோட்டை வீடும் போலீசார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தை கடந்து, நாமக்கல் மாவட்டத்தில் பிடித்து கைது செய்வதும், பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக
உள்ளது.