அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் தலைவர் சுந்தரலட்சுமி கொடியேற்றினார். நகராட்சி கமிஷனர் அசோக்குமார், துணைத் தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சசிகலா கொடியேற்றினார். பி.டி.ஓக்கள் சூரியகுமாரி, பந்தே நவாஸ், துணை தலைவர் உதயசூரியன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சார்பு நீதிபதி ராமலிங்கம் கொடியேற்றினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா, குற்றவியல் நீதிபதி முத்து இசக்கி, வக்கீல்கள் சங்க தலைவர் குருசாமி, வக்கீல்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.எஸ்.பி., கருண்கரட் கொடியேற்றினார். டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் கொடியேற்றினர்.
* வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலர் செல்வக்குமார் கொடியேற்றினார். கல்வி அலுவலர் சையது அலி பாத்திமா, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மலேசியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் டத்தோ மாணிக்கம் கொடியேற்றினார். சேர்மன் ராமச்சந்திரன், கல்லூரி செயலர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலர் சங்கர நாராயணன், முதல்வர் கதிர்காமு, டீன் தில்லை நடராஜன், கல்லூரி போக்குவரத்து செயலர் விக்னேஷ், துணை முதல்வர் பெளர்ணா, பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
* செட்டிகுறிச்சியில் ஊராட்சித் தலைவர் பிரபாகரன் கொடியேற்றினார். ஆத்தி பட்டியில் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, பாலவநத்தத்தில் ஊராட்சி தலைவர் அன்புராஜ், மெட்டுக்குண்டுவில் தலைவர் சுப்புராஜ், செந்நெல்குடியில் தலைவர் சக்திவேல், கடம்பன்குளத்தில் தலைவர் சுப்புலட்சுமி, நக்கல கோட்டையில் தலைவர் வேல்முருகன் கொடியேற்றினார்.
* எஸ்.பி.கே., இன்டர்நேஷனல் பள்ளியில், பள்ளி தலைவர் ரத்தினவேல் கொடியேற்றினார். செயலாளர் கனகவேல்ராஜன் முன்னிலை வகித்தார். முதல்வர் கோகிலம் வரவேற்றார். ஆசிரியை தேவிபேசினார். ஆசிரியர் வடிவேல்முருகன் நன்றி கூறினார்.
* பாலவநத்தம் அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியை உமாதேவி கொடியேற்றினார். ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* ஏ.கல்லுப்பட்டி சித்தி விநாயகர் இந்து துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியை சரளாதேவி கொடியேற்றினார். உதவி ஆசிரியை குணவதி நன்றி கூறினார்.
* சந்திரா நேஷனல் பள்ளியில் செயலர் சரவணன் கொடியேற்றினார். முதல்வர் பாண்டிச்செல்வி வரவேற்றார். ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
* மினர்வா பப்ளிக் பள்ளியில் முதல்வர் வேணி கொடியேற்றினார். தாளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.