விருதுநகர் : விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் கூறியதாவது: கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தேவையான திறன் பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட தொழிற் பயிற்சி மையம் மூலம் தமிழ்நாடு கட்டுமான கழகம் வழங்குகிறது.
இதில் கொத்தனார், வெல்டர், எலெக்ட்ரீசியன், பிளம்பர், கார்பென்டர், சென்ட்ரிங், சாரம் அமைப்பவர் போன்ற தொழிலில் ஈடுபடுபவருக்கு 3 மாத திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதற்கு பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம், ஒரு வாரம் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை இழப்பு ஈடுசெய்ய ரூ.800 ஏழு நாட்களுக்கும் வழங்கப்படும். பயிற்சி முடிப்பவருக்கு தேசிய திறன் மேம்பாட்டு கழக சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம், என்றார்.