திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள், கல்லுாரிகள், பொதுநல அமைப்புகளில், 74 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசப்பற்றுடன் பலர் கொடியேற்று விழாவில் பங்கேற்று, தேசியக்கொடி வணக்கம் செலுத்தினர்.
திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கவுன்சிலர் திவாகரன், பி.டி.ஏ., தலைவர் குழந்தைவேல், மேலாண்மை குழு தலைவர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர். தேசத்தலைவர் குறித்த நாடக நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பழனிசாமி சிறப்புரை ஆற்றினார். மூத்த தமிழாசிரியர் சுந்தரமூர்த்தி, ஆசிரியர் வடிவேல், பீனாகல்பனா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருப்பூர், நொய்யல் வீதி உயர்நிலைப்பள்ளியில், உதவி தலைமை ஆசிரியர் பாரூர்அப்சர் தலைமை வகித்து, கொடியேற்றினார். துவக்கப்பள்ளி ஆசிரியை வசந்தி முன்னிலை வகித்தார். 50வது வார்டு கவுன்சிலர் பெனாசிர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் யாஸ்மின் மற்றும் பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஆசிரியர் சிவராஜ் நன்றி கூறினார்.
திருப்பூர், கோல்டன்நகர் நடுநிலைப்பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் தேவகி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் அண்ணாத்துரை முன்னிலை வகித்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, நடனம், கவிதை போட்டி நடத்தப்பட்டது.
திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், கோவை வீட்டுவசதி துணைபதிவாளர் அர்த்தனாரீஸ்வரன் தலைமை வகித்தார். திருப்பூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்க செயலாளர் முத்துரத்தினம், அண்ணா கூட்டுறவு வீடு கட்டும் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சிபிலிப் வரவேற்றார்.
கருமாரம்பாளையம் நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உமாசாந்தி தலைமை வகித்தார். கவுன்சிலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பரதம், கும்மி, கோலாட்டம், வில்லுப்பாட்டுக்கு மாணவ, மாணவியர் நடனமாடினர். முன்னாள் மாணவர்கள் இளங்கோவன், சிவக்குமார் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினர்.
திருப்பூர், சுண்டக்கம்பாளையம் அரசு துவக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் காளியப்பன் வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் பழனிசாமி, குழு தலைவர் சித்ரா மற்றும் பலர் பங்கேற்றனர்.
தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலத்துணைத்தலைவர் ராஜசேகர், மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகர மாவட்ட காங்., சார்பில், மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்து, தேசிய கொடியேற்றினார். ஐ.என்.டி.யு.சி., சார்பில், இந்திரா நினைவு இல்லத்தில், மாவட்ட கவுன்சில் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். பனியன் சங்க தலைவர் பெருமாள் தேசியக்கொடியேற்றினார்.
பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி தலைவி ரேவதி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கவிதை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி வினோதாவுக்கு, பாராட்டு சான்றிதழை முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி வழங்கினார்.
சிறந்த தலைமை ஆசிரியை பாராட்டு சான்றிதழ் பெற்ற கிருஷ்ணவேனிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பி.டி.ஏ., தலைவர் ராஜேந்திரன், தமிழ் ஆசிரியர் பரந்தாமன், ரோட்டரி கிளப் உதவி கவர்னர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொல்லிக்காளிபாளையம் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தேசிய கொடியை ஏற்றினார். பேரூராட்சி பகுதியில், சிறப்பாக பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு, செயல் அலுவலர் செந்தில்குமார் கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன், பரக்கத்துல்லா, கார்த்திகேயன் உட்பட பங்கேற்றனர்.
அவிநாசி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில், நீதிபதிகள் வடிவேல் மற்றும் ஷபீனா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். வக்கீல்கள் சின்னசாமி, சுப்பிரமணியம், ஈஸ்வரன், யோகேஷ், கணேஷ்குமார் மற்றும் கோர்ட் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.