திருப்பூர்:அவிநாசி அருகே தெக்கலுாரில் உள்ள, கே.பி.ஆர்., மில் குழுமங்களின், குவாண்டம் நிட்ஸ் - 3 மில்லில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.அதில், நேற்று குடியரசு தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அவிநாசி உட்கோட்ட போலீஸ் டி.எஸ்.பி., பவுல்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், 'பெண் பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம்,' குறித்து சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, நம் நாட்டின் பாரம்பரிய நடனம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கும், சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். விழாவில், 'குவாண்டம் நிட்ஸ் 3' நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.