திருப்பூர்:பத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து பத்து அரசு பள்ளிகளை தத்தெடுத்து வாலிபால் சுழற்கோப்பை போட்டியை நடத்துகிறது.
இதில், சின்னச்சாமி அம்மாள், கே.எஸ்.சி., நஞ்சப்பா, பெரியாயிபாளையம், கணக்கம்பாளையம், வாவிபாளையம், மங்கலம், அனுப்பர்பாளையம், பெருமாநல்லுார் மற்றும் ஊத்துக்குளி அரசு பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்து உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
இதற்காக, அனுப்பர்பாளையம் மற்றும் பெரியாயிபாளையம் அரசு பள்ளியிலும், பயிற்சி முகாம் துவங்கியது. வாலிபால் லீக் தொடர் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டம், 28, 29 ஆகிய தேதிகளில் அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் நடைபெறுகிறது.
இதற்காக, வாலிபால் கோர்ட், 7.45 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டது. இதனை, பூண்டி ரோட்டரி தலைவர் கதிர்வேல், இப்ராஹிம், டாக்டர் விஜய் மற்றும் பிரகாஷ் ஏற்பாடு செய்து கொடுத்தனர். வடக்கு ரோட்டரி சங்க தலைவர் ரவிசங்கர், செயலாளர் சுனில்குமார், பொருளாளர் சுதாகரன், சேர்மன் ஜெகநாதன் மற்றும் அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து நடத்துகின்றன.