திருப்பூர்:திருப்பூர், நெருப்பெரிச்சல் அருகிலுள்ள கூலிபாளையம் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷகம் பூஜை கடந்த வாரம் துவங்கின. இதையொட்டி, நேற்று முன்தினம் முளைப்பாலிகை எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். புண்ணிய நிதிகளில் இருந்து தீர்த்தமும் எடுத்துவரப்பட்டது.
தொடர்ந்து, நேற்று அதிகாலை நிறைவுகால யாகசாலை பூஜைகள் நடந்து, கும்பங்கள் புறப்பட்டது. அதன்பின், சிவாச்சார்யார்கள், காலை, 9:30 முதல், 10:00 மணிக்குள் கோபுரங்களுக்கும், 10:00 முதல், 10:30 மணி வரை, ஸ்ரீமாகாளியம்மனுக்கும் கும்பாபிேஷகம் செய்வித்தனர்.
அதன்பின், மகாபிேஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி, பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிேஷகத்தை, பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் அர்ச்சகர் கணேசமூர்த்தி தலைமையில் சிவாச்சார்யார்கள் குழுவினர் நடத்தினர். விழாவில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், 2வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.