திருத்தணி:திருத்தணி தாலுகா, நல்லாட்டூர் கிராமத்தில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அரசு நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் ஊர்ப்புற நுாலகம் ஆகியவை இயங்கி வருகின்றன.
அரசு பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், நுாலகத்திற்கு தினசரி அதிகளவில் வாசகர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பள்ளி வளாகத்தில் கட்டடம் கட்டுவதற்கு தேவையான மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் பல நாட்களாக கொட்டி வைத்துள்ளனர்.
இதனால் மாணவர்கள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். மேலும் மதிய உணவு மாணவர்கள் வாங்குவதற்கு செல்லும்போதும் சிரமப்படுகின்றனர்.
இதுதவிர, மாணவர்கள் கட்டுமானப் பொருட்கள் மீது ஏறி விளையாடும்போதும் விபத்துகள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, பள்ளி வளாகத்தில் குவித்து வைத்துள்ள ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.