சென்னை:சென்னை தனியார் மருத்துவமனையின் 9வது மாடியில் இருந்து குதித்து, வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் நீலேஷ் குமார் சர்மா. இவர், சூளைமேடு காமராஜ் நகரில் தங்கியிருந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நீலேஷ்குமார், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து, மருத்துவமனையின் 9வது மாடியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று மாலை அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.