திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, பேரத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ஆகாஷ்குமார், 16. இவர், கடந்த, 22ம் தேதி, உறவினர் கார்த்திக் என்பவருடன், அவரது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் சென்று கொண்டிருந்தார்.
ஈக்காடு அருகில் வந்தபோது, எதிரில் வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க, 'பிரேக்' போட்டபோது, தடுமாறி விழுந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த ஆகாஷ்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு, நேற்று முன்தினம் இரவு, அவர் இறந்தார். இதுகுறித்து, புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.