ஜனநாயகத்தின் துாண் தான் கிராம சபை: கலெக்டர்
Added : ஜன 27, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

திருவள்ளூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தை முன்னிட்டு, 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.

திருவள்ளூர் ஒன்றியம், புல்லரம்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின் அவர் பேசியதாவது:

கிராமசபை என்பது நம் ஜனநாயகத்தின் ஒரு தேசிய துாண் என்று சொல்லலாம். ஒராண்டுக்கு ஆறு கிராம சபை கூட்டம் நடக்கிறது.

அரசின் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அலுவலர்கள் தெரிவிப்பர்.

ஒவ்வொரு கிராம சபையில் மக்கள் பங்கேற்று குறைகளை கூறி மனுக்கள் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சப்-கலெக்டர் மகாபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தாசில்தார் வெண்ணிலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்பாபு, சந்தானம் உட்பட ஒன்றிய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

குறிப்பாக, கோரமங்கலம் ஊராட்சியில், திருட்டு, கொள்ளை மற்றும் விபத்துகள் தடுப்பதற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்தனர்.



வாக்குவாதம்




கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சியில் தலைவர் ரமேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது இளைஞர்கள் ஊராட்சியில் குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை.

வரவு- - செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்க வேண்டும் என, வாக்குவாதம் செய்தனர். இதற்கு பதிலளித்த ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், குப்பை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரவு - செலவு கணக்குகளை அலுவலகத்தில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

திருவாலங்காடு ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பனப்பாக்கம் ஊராட்சியில், பழைய பனப்பாக்கம் கிராமத்தில் சுடுகாடுக்கு சுற்றுச்சுவர் வேண்டும், காலனி பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்.

பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் புதிதாக கட்டிவரும் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளிக்கு, மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும், எம்.எல்.ஏ.,வுமான துரைக்கண்ணு பெயர் சூட்ட வேண்டும்.

மீஞ்சூர் ஒன்றியத்தில், 55 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. அத்திப்பட்டு ஊராட்சியில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேருந்து மற்றும் அவசர ஊர்திகள் சிரமம் இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்; அனாதீனம், புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து, மழை நீர் சேமிப்பிற்கு குளங்கள் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடுவாஞ்சேரி ஊராட்சியில், கிராமசபை கூட்டங்களுக்கு அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அரசு நிலங்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.



தலையீட்டை தவிர்க்கவும்




கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், 61 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடந்தது. புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில், ஊராட்சி செயல்பாடுகள் மீதான விவாதங்கள் வாக்குவாதமாக மாறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

ஏடூர் கிராமத்தில், நடந்த கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீட்டை தவிர்க்க வேண்டும். தலைவரை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என பொதுமக்கள் தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

ஊத்துக்கோட்டை அடுத்த, அனந்தேரி ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், அரசு பேருந்துகள் கிராம எல்லையில் நின்று செல்லுதல், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் பெரும்பாலான ஊராட்சிகளில் நடந்த கிராம சபையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், தார்சாலை, கால்வாய் அமைத்தல், ஊராட்சியில் புதிய மின் கம்பம் அமைத்தல், கிராம சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


- நமது நிருபர் குழு -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X