திட்டக்குடி--திட்டக்குடியில், பா.ஜ., கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கடலுார் மாவட்டம், திட்டக்குடி பஸ் நிலையத்தில் உள்ள பா.ஜ., கொடிக் கம்பத்தில், அக்கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று தேசியக் கொடி ஏற்றினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த திட்டக்குடி போலீசார், பா.ஜ., நிர்வாகிகளை அழைத்து எச்சரித்தனர்.
இதையடுத்து, மதியம் 2.30 மணியளவில், பா.ஜ., கொடிக் கம்பத்தில் இருந்து தேசியக்கொடி இறக்கப்பட்டது.
இது தொடர்பான படங்கள் சமூகவலைதங்களில் வைரலானது.