சேத்தியாத்தோப்பு-என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, 7 கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சுரங்க விரிவாக்கத்திற்காக கத்தாழை, கரிவெட்டி, மும்முடிசோழகன், வளையமாதேவி மேல்பாதி, கீழ்பாதி ஊ.ஆதனுார், வி.சாத்தப்பாடி ஆகிய 7 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் என்.எல்.சி., நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டில் இருந்து நிலம் கொடுத்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத என்.எல்.சி., நிறுவனம், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையை கண்டித்து, 7 கிராம மக்கள் தங்களது வீடுகளில் நேற்று கருப்புக் கொடியேற்றினர். விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.