சிதம்பரம் -குடியரசு தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், உலக பிரசித்திப் பெற்ற, நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, குடியரசு தினத்தை முன்னிட்டு, ராஜகோபுரத்தில் தேசியக் கொடி நேற்று ஏற்றப்பட்டது.
முன்னதாக, பொது தீட்சிதர்கள் சார்பில், சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நடராஜர் சன்னதி சித்சபையில் தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்து, மேள தாளங் கள் முழங்க, கோபுர உச்சிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, கீழ வீதி ராஜகோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
கடந்த 1950ம் ஆண்டில் இருந்து, குடியரசு தினத்தன்று இக்கோவிலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.