விழுப்புரம்-விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., மாணவரணி சார்பில், நடந்த கூட்டத்துக்கு தி.மு.க., மாவட்டச் செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத் வரவேற்றார்.
லட்சுமணன் எம்.எல்.ஏ.,, மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை முன்னிலை வகித்தனர்.
மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் இறைவன், தலைமை கழக பேச்சாளர் அருள்தாஸ், மாநில ஆதிதிராவிட நலஅணி இணை செயலாளர் புஷ்பராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சிவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், விழுப்புரம் நகர மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி, துணை சேர்மன் சித்திக்அலி பங்கேற்று பேசினர். மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வ சிகாமணி, பிரபாகரன், நகர நிர்வாகிகள் புருஷோத்தமன், சக்ரபாணி, நந்தா நெடுஞ்செழியன், மணிகண்டன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாணவர் அணி அமைப்பாளர் விக்ரமன் நன்றி கூறினார்.