திண்டிவனம்-திண்டிவனத்தில் தி.மு.க., மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கநாள் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில், நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாபு தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரமணன் துவக்கி வைத்து பேசினார்.
கூட்டத்தில், அமைச்சர் மஸ்தான், பேச்சாளர்கள் நன்மாறன், தமிழ்பிரியன் ஆகியோர் பேசினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, சேதுநாதன், நகர மன்ற சேர்மன் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் அருணகிரி, மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பிரதிநிதி முருகன், நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் சின்ன ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கவுதமன், சிங்கனுார் பார்த்திபன், தீர்த்தக்குளம் ராஜா, மாணவரணி முஸ்தாபா, ஆடிட்டர் பிரகாஷ், சிறுபான்மை பிரிவு அன்சாரி, இளைஞரணி ஷாகித், ஷாகுல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகர மாணவரணி அமைப்பாளர் அஜய் நன்றி கூறினார்.