கள்ளக்குறிச்சி-குப்பை கொட்டும் பிரச்னையில் பெண்ணை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் மோகூர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி மனைவி அலமேலு,35. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய்காந்தி குடும்பத்திற்கும் இடையே பொது இடத்தில் குப்பை கொட்டுவதில் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
கடந்த 23 ம்தேதி மதியம் அலமேலு வீட்டின் எதிரே வழிக்கு இடையூறாக டிராக்டரை சஞ்சய்காந்தி நிறுத்தி குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தார்.
இதனை அலமேலு தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த சஞ்சய்காந்தி, அவரது மனைவி கொளஞ்சியம்மாள், மகன் நாகராஜ் ஆகியோர் ஆபாசமாக திட்டினர்.
அவரை, கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அலமேலு புகாரின்பேரில், சஞ்சய்காந்தி உட்பட மூவர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.