கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை திருடிச் சென்ற கணவர் மீது மனைவி போலீசில் புகார் செய்தார்.
கள்ளக்குறிச்சி, கே.பி.ஆர்., நகரை சேர்ந்தவர் ஜீனத்,47. இவரது கணவர் அபுபக்கர், 60; இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
ஜீனத் நேற்று வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். இதனையறிந்த அவரது கணவர் அபுபக்கர் காலை 10:00 மணியளவில் ஜீனத் வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து, உள்ளே இருந்த டிவி., பிரிட்ஜ், ேஷாபா, காஸ் அடுப்பு, சிலிண்டர் மற்றும் பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து சென்றார்.
இதனை தடுக்க முயன்ற அக்கம் பக்கத்தினரை அபுபக்கர் மிரட்டினார். பின், வீடு திரும்பிய ஜீனத், இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.