கள்ளக்குறிச்சி-சின்னசேலம் மற்றும் கச்சிராயபாளையம் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் மற்றும் கச்சிராயபாளையம் பகுதியில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடைகளில் சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.
பெட்டிக் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த சின்ன சேலத்தை சேர்ந்த கோபால் மகன் மணிகண்டன்,31; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், கச்சிராயபாளையம் பஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
பெட்டிக் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்னை செய்த அருந்ததியர் தெருவைச் சேர்ந்த செல்வநாதன்,43; மாதவச்சேரி பெரியசாமி மனைவி அம்பிகா,35; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.