கள்ளக்குறிச்சி-தேசிய வாக்காளர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு, மாநில அளவிலான விருதினை கவர்னர் வழங்கினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி ஆண்டுதோறும் ஜன., 25ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் 13-வது தேசிய வாக்காளர் தின சிறப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு கவர்னர் ரவி தலைமையில் நடந்தது.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்தல், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம், எபிக்கார்டு பெறுதல் மற்றும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டமைக்காக கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு, கவர்னர் ரவி மாநில அளவிலான விருது வழங்கி கவுரவித்தார்.