கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட துணை செயலாளர்கள் காமராஜ், அண்ணாதுரை, பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், ராஜூ முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்ராயலு வரவேற்றார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த் ஒருங்கிணைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர் சாதிக் பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் ராசா எம்.பி., பேசுகையில், நாம் தமிழர்களாக கூடி இருக்கிறோம். ஒரு மொழி என்பது பரிவர்த்தனைக்கான பாைஷ. ஆனால் தமிழுக்கு மட்டும் தான் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கான பண்பாடு, அடையாளம் உள்ளது. ஜாதியும், மதமும் நம்மை பிரிக்கும், மொழிதான் நம்மை ஒன்று சேர்க்கும்' என்றார்.
கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், அசோக்குமார், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், ராஜேந்திரன், நகர செயலாளர்கள் மலையரசன், ஜெய்கணேஷ், ஒன்றிய சேர்மன்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன், பேரூராட்சி சேர்மன் வீரசாமி, துணை சேர்மன் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.