The collector named the child in the village sabha meeting | கிராம சபா கூட்டத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய கலெக்டர் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கிராம சபா கூட்டத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய கலெக்டர்
Added : ஜன 27, 2023 | |
Advertisement
 
The collector named the child in the village sabha meeting   கிராம சபா கூட்டத்தில்  குழந்தைக்கு பெயர் சூட்டிய கலெக்டர்



கள்ளக்குறிச்சி-கிராம சபா கூட்டத்தில் குழந்தைக்கு கலெக்டர் தனது பெயரை சூட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நயினார்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தனது மனைவியுடன் பங்கேற்றார். கூட்டத்தில் கிராம பொதுமக்கள் பலர் கோரிக்கை மனு அளிக்க ஆர்வம் காட்டினர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த சிவக்குமார் - காமாட்சி தம்பதியினர் தங்களது இரண்டு மாத ஆண் குழந்தையை கலெக்டரிடம் கொடுத்த பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கலெக்டர் சிரித்து கொண்டே குழந்தையை வாஞ்சையுடன் துாக்கி தனது பெயரான ஷ்ரவன்குமார் என, சூட்டினார். தொடர்ந்து கலெக்டரின் மனைவி அந்த பெயரை மூன்று முறை குழந்தையின் காதில் சொல்லி மகிழ்ந்தார்.

இதை பார்த்ததும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். உடனே கலெக்டர் என்னைபோல் வருங்காலத்தில் கலெக்டராக வரவேண்டும் என்பதற்காகவே எனது பெயரை சூட்டினேன் என்று தெரிவித்தார். இதை கேட்டதும் பொதுமக்கள் கைதட்டி ஆராவரம் செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X