திருக்கோவிலுார்;திருக்கோவிலுார் நகராட்சியில் நடந்த குடியரசு தின விழாவில் நகர மன்ற சேர்மன் முருகன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் ராஜா வரவேற்றார்.
திருக்கோவிலுார் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் நீதிபதி பத்மாவதி தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். மாஜிஸ்திரேட் வெங்கடேஷ்குமார் தேசியக் கொடி ஏற்றினார். வழக்கறிஞர்கள் செல்வராஜ், தீர்த்தமலை, சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைமை எழுத்தர் சிவக்குமார் நன்றி கூறினார்.
தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தேசிய கொடியை ஏற்றினார்.
திருக்கோவிலுார் முன்னாள் படை வீரர்கள் சார்பில் ஐந்து முனை சந்திப்பில் உள்ள காந்தி சிலை அருகே தேசியக்கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற சுபேதார் சேகர், நர்சிங் ஆபிசர் கர்னல் சரோஜா, கல்யாணகுமார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சீதாபதி, ராமச்சந்திரன், கோவிந்தன் பங்கேற்றனர்.
கிளை நுாலகத்தில் நடந்த விழாவில் வாசகர் வட்டக் குழு தலைவர் உதியன் தலைமை தாங்கினார். நுாலகர் தியாகராஜன் தேசியக்கொடி ஏற்றினார். நுாலகர் சாந்தி இனிப்பு வழங்கினார். கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் கலியபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சின்னசேலம்;
சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தாசில்தார் இந்திரா தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றினார். மண்டல துணை தாசில்தார்கள் மனேஜ் முனியன், மணி, வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சத்தியமூர்த்தி தேசிய கொடியேற்றினார். பி.டி.ஒ.,க்கள் இந்திராணி, ஜெகன்நாதன் பங்கேற்றனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் தேசிய கொடியேற்றினார். செயல் அலுவலர் உஷா முன்னிலை வகித்தார். கிராமத்தின் ஒலி அலுவலகத்தில் இயக்குனர் சக்திகிரி கொடியேற்றினார்.