கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் விளையாட்டு திருவிழா நடந்தது.
பள்ளி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் நீலமங்கலம் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் தேசிய கொடியேற்றினார். முன்னாள் ராணுவ வீரர் ஸ்ரீராமகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் ஒலிம்பிக் கொடி ஏற்றினர்.
பள்ளி பிரிவு முதல்வர்கள் தனசேகரன், சுமதி, பிரேமா, அன்பழகன், லட்சுமிபிரபா, சாலிஜோஸ், உஷா, மோரின் லாசரஸ் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் நன்றி கூறினார்.அதேபோல் ஏ.கே.டி., டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தேசிய கொடியேற்றினார்.