தேனி -மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்வில் 66 போலீசாருக்கு முதல்வர் பதக்கங்கள், 209 அரசுத்துறை அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேனி தினமலர் நகரில் உள்ள தினமலர் அலுவலகத்தில் நேற்று காலை தேசிய கொடிக் ஏற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டன.
தேனி: மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் முரளீதரன் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி, போலீஸ், தீயணைப்பு, ஊர்க்காவல்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின் சமாதானம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கலெக்டர், எஸ்.பி., பிரவீன்உமேஷ்டோங்கரே இணைந்து வண்ண பலுான்களை வானில் பறக்க விட்டனர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 66 போலீஸ்காரர்களுக்கு முதல்வர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். பின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, கம்பம் அரசு மருத்துவமனை, தேனி என்.ஆர்.டி., மருத்துவமனை நிர்வாகிகள், 209 அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர். அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் பல்வேறு பள்ளி, கல்லுாரிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த விழாவில் எஸ்.பி.,பிரவீன்உமேஷ் டோங்கரே கொடி ஏற்றினார். ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், 5 உட்பிரிவு, ஆயுதபடை, பிறதுறை டி.எஸ்.பி.,க்கள், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், எஸ்.ஐ., அசோக், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ரவி கொடி ஏற்றினார். முதன்மை மாவட்ட நீதிபதி சஞ்சய்பாபா, அரசு சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, குடியரசு தினம், அரசியலமைப்பு சட்டம், மக்களாட்சியின் மாண்பு குறித்து எடுத்துரைத்தார். தேனி வழக்கறிஞர்கள் முத்துராமலிங்கம், சந்தானகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினர்.
கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரமேஷ், சார்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரி, குடும்பநல நீதிமன்ற நீதிபதி உரை ஆற்றினர். முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிமன்ற எழுத்தர் மனோகரன் நன்றி தெரிவித்தார்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடந்த விழாவில் தலைவர் ரேணுப்பிரியா , காந்தியின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, கொடி ஏற்றினார். கமிஷனர் வீரமுத்துக்குமார், பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் குணசேகரன், மேலாளர் முனிராஜ் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சி.இ.ஓ., செந்திவேல்முருகன் கொடி ஏற்றினார். உதவி திட்ட அலுவலர் சேதுராமன், நேர்முக உதவியாளர் மணிவண்ணன், கண்காணிப்பாளர் பஞ்சநாதன், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
அரண்மனைப்புதுார் ஊராட்சியில் தலைவர் பிச்சை கொடி ஏற்றினார். துணைத் தலைவர் காசி, ஒன்றிய துணைத் தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கந்தவேல், ஊராட்சிச் செயலாளர் பாண்டி, உறுப்பினர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.
நாகலாபுரம் ஊராட்சியில் ஞானமணி கொடி ஏற்றினார். வார்டு உறுப்பினர்கள், ஊராட்சிச் செயலர், பொது மக்கள் பங்கேற்றனர்.
கோவிந்தநகரம் ஊராட்சியில் தலைவர் நவநீதன் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சிச் செயலர் செந்தில், பொது மக்கள் பங்கேற்றனர்.
கோடாங்கிபட்டி பூர்ண வித்ய பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இயக்குனர் ஹர்சவர்தன் கொடி ஏற்றினார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. தலைவர் முத்துகோவிந்தன் பரிசுகள் வழங்கினார். இயக்குனர்கள் ரேணுகா தேவி, அரவிந்தன், குமார், முரளிதரன், சரன், தாமோதரன் கலந்து கொண்டனர். முதல்வர் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.
தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்லுாரி முதல்வர் மீனாகுமாரி வரவேற்றார். பள்ளி செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பொறியாளர் நம்பெருமாள் கொடி ஏற்றினார். மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இணைச் செயலாளர் மகேஷ்கண்ணன் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
தேனி கம்மவார் ஐ.டி.ஐ., வளாகத்தில் கம்மவார் சங்க செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி கொடி ஏற்றினார். முதல்வர் பிரகாசம் வரவேற்றார். செயலாளர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் சேகர் நன்றி தெரிவித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளியில் சங்க செயலாளர் பொன்னுச்சாமி கொடி ஏற்றினார். செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளிச் செயலாளர் வாசு, இணைச் செயலாளர் ராஜேஷ் பேசினர். முதல்வர் பாலாபிரேமா ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
லைப் இன்னோவேசன் பள்ளியில் தலைவர் நாராயணபிரபு தலைமை வகித்து, கொடி ஏற்றினார். முதல்வர் சுகந்தி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் காஞ்சனா தேவி கொடி ஏற்றினார். உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், செயலாளர் ஆனந்தவேல் முன்னிலை வகித்தனர்.
பள்ளிச் செயலாளர் பாண்டிக்குமார் வரவேற்றார். நிர்வாகக் குழு உறுப்பினர் கஜேந்திரன் வாழ்த்து தெரிவித்தார். ஆசிரியர் உமாதேவி ஐந்தாம் வகுப்பு மாணவிகள் ஹரிணி, ஹாசினி, தர்ஷிணி சிறப்புரை ஆற்றினர். புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் தன்னார்வலர் ரேகா அத்திட்டத்தைப் பற்றி விளக்கினார். உதவி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.
சீலையம்பட்டி இந்து நடுநிலைப் பள்ளியில் பள்ளி செயலர் சண்முகநாதன் தலைமை வகித்து, கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் வரவேற்றார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் கனகாம்பரம் நன்றி தெரிவித்தார்.
வரத வேங்கடரமண மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தினகரன் கொடி ஏற்றினார். ஆசிரியர் குணசேகரன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
ஆசிரியர்கள் லெனின், குணசேகரன் குடியரசு தின சிறப்புகளைப் பற்றி பேசினர். தலைமை ஆசிரியர் தலைமை உரை ஆற்றினார்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழ்ங்கப்பட்டன. நிகழ்வை ஆசிரியர்கள் சேது, சரவணன் தொகுத்து வழங்கினர். உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
பாக்யா மெட்ரிக் பள்ளியில் முதல்வர் பரந்தாமன் கொடி ஏற்றினார். செயலாளர் பாக்யகுமாரி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. அல்லிநகரம் நாயுடு சங்கத்தலைவர் சுப்புராஜ், சினிமா இயக்குனர் ராம், ஆசிரியர்கள் , மாணவர்கள் பங்கேற்றனர்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முத்துத்தேவன் பட்டியில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் நீதிராஜன் கொடி ஏற்றினார். முதல்வர் ஜெகநாதன் வரவேற்றார். பள்ளிச் செயலாளர் பாலசரவணக்குமார் தலைமை உரை வழங்கினார். இணைச் செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார் பேசினர். பள்ளி நிர்வாகக் குழுவினர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். துணை முதல்வர் செல்வராணி நன்றி தெரிவித்தார்.
நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி செயலாளர் காசிபிரபு கொடி ஏற்றினார். துணை முதல்வர் கோமதி வரவேற்றார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்த வேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர்கள் செண்பகராஜன், அருண், முதல்வர் சித்ரா, துணை முதல்வர் சுசிலா சிறப்புரை ஆற்றினர். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆத்திராஜன், பிரபு ரத்தினம் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். என்.எஸ்.எஸ்., மாணவிகள் ஜெயகாயத்ரி, வாணிமவுலிகா குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றனர். துணை முதல்வர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் கொடி ஏற்றினார். விழாவில் 74 மரக்கன்றுகள் நட்டு வைத்து இணைச் செயலாளர் நவீன்ராம் விழாவை துவக்கினார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
உறவின் முறை தலைவர் ராஜமோகன், துணைத் ததைலவர் கணேஷ், செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரிச் செயலாளர் மகேஸ்வரன் பங்கேற்று பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் மாதவன், வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், உடற்கல்வி இயக்குனர் சுந்தராஜன், பேராசியர்கள் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார் நன்றி தெரிவித்தார்.
தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் நிர்வாகக் குழு உறுப்பினர் நவநீதன் கொடி ஏற்றினார். சங்க தலைவர் நம்பெருமாள், பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, செயலர் தாமோதரன், பொருளாளர் ரெங்கராஜ் கண்ணன், கல்லுாரி முதல்வர் சீனிவாசன், முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லுாரியில்சங்க இணைச் செயலாளர் மகேஷ் கொடி ஏற்றினார். கல்லுாரி செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் விஜயன் , பொருளாளர் தாமரைக் கண்ணன், முதல்வர் தர்மலிங்கம் பங்கேற்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் லோகிராஜன் கொடி ஏற்றினார். பி.டி.ஓ., ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சந்திரகலா கொடி ஏற்றினார். பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., ராமலிங்கம் கொடி ஏற்றினார். அலுவலர்கள் அமாவாசை, கார்மேகம், மணிகண்டன், பால்பாண்டி உட்பட பல பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நிலைய அலுவலர் கணேசன் கொடி ஏற்றினார். தீயணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மேலாளர் நாகேந்திரன் முன்னிலையில் ஆண்டிபட்டி தீயணைப்பு அலுவலர் கணேசன் கொடி ஏற்றினார்.
கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், ஆப்த மித்ரா பேரிடர் பயிற்சி பெற்றவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ., மேல்நிலைப் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் எஸ்.கே.ஏ., கல்வி குழுமத் தலைவர் வச்சிரவேல் முன்னிலையில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கொடி ஏற்றினார். ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
எஸ்.கே.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் சாந்தி கொடி ஏற்றினார். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
எஸ்.கே.ஏ., கல்வியியல் கல்லூரியில் முதல்வர் ராஜேந்திரன் கொடி ஏற்றினார். மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது சிறந்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் துவக்கப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் மத்யூ ஜோயல் கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சித்தார்பட்டி கணேசா நடுநிலைப் பள்ளியில் ஆசிரியை பிரபாவதி கொடி ஏற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கம்பம்: நகராட்சியில் கமிஷனர் பாலமுருகன் கொடி ஏற்றினார். தலைவர் வனிதா, உதவி பொறியாளர் சந்தோஷ், துப்புரவு அலுவலர் அரசகுமார், பில்டிங் இன்ஸ்பெக்டர் சலீம், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோதண்டபாணி கொடி ஏற்றினார். தலைவர் பழனி மணி உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தெற்கு போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் லாவண்யா, வடக்கு போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடி ஏற்றினர்.
நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் தாளாளர் விஸ்வநாதன் கொடி ஏற்றினார். மாணவ மாணவிகளின் கண்கவர் நடனங்கள் நடந்தன. பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தன. முதல்வர் மோகன், ஒருங்கிணைப்பாளர் மலர்விழி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் காந்த வாசன் கொடி ஏற்றினார். இணைச் செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் கருப்பசாமி கொடி ஏற்றினார். மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைவர் சவுந்திரராசன் கொடி ஏற்றினார். தாளாளர் கவிதா, முதல்வர் சுவாதிகா உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர்.
ஆர்.ஆர், இன்டர்நேசனல் பள்ளியில் தலைவர் ராசாங்கம் கொடி ஏற்றினார். துணை தலைவர் அசோக் குமார், பொருளாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உத்தமபாளையம்: ஆர்.டி.ஓ. அலுவலத்தில் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன் கொடி ஏற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர். உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திரசேகரன் கொடி ஏற்றினார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகாந்தன் கொடி ஏற்றினார். ஒன்றிய தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சின்னமனுார்: நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் கணேஷ் கொடி ஏற்றினார். தலைவர் அய்யம்மாள், துணை தலைவர் முத்துகுமார், பில்டிங் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரத மணி கொடி ஏற்றினார். தலைவர் நிவேதா உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
போடி: போடி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் செல்வராணி கொடி ஏற்றினார். நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
போடியில் முன்னாள் ராணுவத்தினர் சங்க அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் கொடி ஏற்றினார். நிகழ்ச்சிக்கு தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.முருகன், துணை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
போடி சி.பி.ஏ., கல்லூரியில் என்.சி.சி., மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பேராசிரியர் மாடசாமி கொடி ஏற்றினார். தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் புருஷோத்தமன், முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாலமுருகன், நிர்வாக குழு உறுப்பினர் சொரூபன் முன்னிலை வகித்தனர். என்.சி.சி., திட்ட அலுவலர் சிவா வரவேற்றார். மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போடி அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வர் திருநாவுக்கரசு கொடி ஏற்றினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தமிழ்மாறன், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குபேர ராஜா, பேராசிரியர் ரம்யா உட்பட கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
போடி வட்டார ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் தலைவர் காந்தி கொடி ஏற்றினார். செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் குமரேசன், கண்காணிப்பாளர் செல்வராஜ், துணைத் தலைவர் பரமேஸ்வரன், இணைச் செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் ராமசுப்பிரமணியம் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணி உட்பட நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிர்வாக குழு உறுப்பினர் வாசு கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியை அலர்மேலு தேவசேனா, ஆசிரியர் நதியா உட்பட பலர் பங்கேற்றனர்.
போடி அன்னை இந்திரா நினைவு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவனேஸ்வர மணிச் செல்வன் கொடி ஏற்றினார். நேரு குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் பிரேமா, பள்ளி ஆசிரியர் உமா உட்பட பங்கேற்றனர்.
போடி காமராஜ் வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் செயலாளர் உஷா எல்லம்மாள் கொடி ஏற்றினார். போடிநாயக்கனூர் சேவா அறக்கட்டளை நிறுவனர் முத்துவிஜயன், மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் நீலமேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
உப்புக்கோட்டை பச்சையப்பா நர்சரி அண்டு பிரைமரி பள்ளியில் தபால் ஊழியர் நடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கொடி ஏற்றினார். தாளாளர் லட்சுமிவாசன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ரஞ்சனி வரவேற்றார். மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
டொம்புச்சேரி ஊராட்சியில் தலைவர் குருவுலட்சுமி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ஜெயலட்சுமி, செயலாளர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சில்லமரத்துப்பட்டி ஊராட்சியில் துணைத் தலைவர் திருச்சுதன் கொடி ஏற்றினார். செயலாளர் மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
போடி அம்மாபட்டி ஊராட்சியில் தலைவர் சின்னப்பாண்டி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
போடி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மணிகண்டன், தாலுகா ஸ்டேஷனில் எஸ்.ஐ., தெய்வேந்திரன், அனைத்து மகளிர் ஸ்டேஷனில் எஸ்.ஐ., வசந்தா கொடி ஏற்றினர்.
போடி தீயணைப்பு துறை அலுவலகத்தில் தீயணைப்பு துறை அலுவலர் சக்திவேல் கொடி ஏற்றினார்.
போடி நகர் காங்., சார்பில் நகர தலைவர் முசாக்மந்திரி கொடி ஏற்றினார். மாவட்ட துணை தலைவர் சன்னாசி, பொதுக்குழு உறுப்பினர் அரசகுமார் உட்பட பல பங்கேற்றனர்.
போடி போஜன் பூங்கா பஸ் நிறுத்தத்தில் பா.ஜ., சார்பில் மாவட்ட செயலாளர் தண்டபாணி கொடி ஏற்றினார். நகரத் தலைவர் சந்திரசேகர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூடலுார்: -நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் காஞ்சனா முன்னிலையில் தலைவர் பத்மாவதி கொடி ஏற்றினார். பொறியாளர் வரலட்சுமி, மேலாளர் ஜெயந்தி, கவுன்சிலர் லோகந்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-வடக்கு, தெற்கு போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் பிச்சைமணி கொடி ஏற்றினார்.
-என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கட் குமார் கொடி ஏற்றினார்.
-ராஜாங்கம் நினைவு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் டேனியல் கொடி ஏற்றினார்.
திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை பிரபாவதி முன்னிலையில், தாளாளர் மூர்த்திராஜன் கொடி ஏற்றினார்.
என்.எஸ்.கே.பி., காமாட்சி அம்மாள் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை சத்தியபாமா கொடி ஏற்றினார்.
ஊராட்சி ஒன்றிய பூங்கா நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ஜெயரூபி கொடி ஏற்றினார்.
வ.உ.சி., நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அருண் பிரசன்னா கொடி ஏற்றினார்.
மழலையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சகிலா, ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளியில் தலைமை ஆசிரியை பாலகார்த்திகா கொடி ஏற்றினார்.
முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க அலுவலகத்தில் தலைவர் கொடியரசன் கொடி ஏற்றினார்.
பா.ஜ. சார்பில் பழைய பஸ் ஸ்டாண்டில் நகரத் தலைவர் முருகேசன் கொடி ஏற்றினார்.
காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் ஜெயபிரகாஷ் கொடி ஏற்றினார்.
எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் நகர பொருளாளர் சபீர்கான் தலைமையில், செயலாளர் காதர் முன்னிலையில், ஆண்டிப்பட்டி தொகுதி தலைவர் அஜ்மீர்கான் கொடி ஏற்றினார்.
முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் கொடி ஏற்றினார்.
கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் முதல்வர் ரேணுகா முன்னிலையில், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி கொடி ஏற்றினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கவிதா, அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் கொடி ஏற்றினர்.
பெரியகுளம்: சப்- கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சிந்து கொடி ஏற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர்.
நகராட்சியில் தலைவர் சுமிதா கொடி ஏற்றினார். கமிஷனர் புனிதன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் காதர்ஷெரீப் கொடி ஏற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் குமார் கொடி ஏற்றினார். நர்சிங் கண்காணிப்பாளர் சந்திரா, நர்ஸ் கணேஷ்குமார் பங்கேற்றனர்.
டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., கீதா கொடி ஏற்றினார். போலீசார் பங்கேற்றனர்.
தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சங்கர் கொடி ஏற்றினார். போலீசார் பங்கேற்றனர்.
தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கத்தில் ராணுவ கேண்டீன் மேலாளர் தனபால் கொடி ஏற்றினார். தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் பொன்னுச்சாமி, உறுப்பினர்கள் முத்துலட்சுமி, காமராஜ் பாண்டியன், முத்துகாமு, லட்சுமி பங்கேற்றனர். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி முதல்வர் ராஜாங்கம் கொடி ஏற்றினார். துறைத் தலைவர்கள், பேராசிரியர், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். பி.டி.ஓ., ஜெகதீசன் கொடி ஏற்றினார்.
வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுரேஷ் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் அழகர், கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
தென்கரை பேரூராட்சியில் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மோகன்குமார் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ராதா, கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஆளவந்தார் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் மலர்கொடி, கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
வடுகபட்டி கவியரசு கண்ணதாசன் கிளை நூலகத்தில், நூலக வளர்ச்சிக்குழு தலைவர் டாக்டர் செல்வராஜ் கொடி ஏற்றினார். பேரூராட்சி துணைத் தலைவர் அழகர், நூலகர்கள் திருமூர்த்தி, கந்தவேல் பங்கேற்றனர்.
கீழ வடகரை ஊராட்சியில் தலைவர் செல்வராணி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ராஜசேகரன், ஊராட்சி செயலர் ஜெயபாண்டியன் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
எண்டப்புளி ஊராட்சியில் தலைவர் சின்னப்பாண்டியன் கொடி ஏற்றினார். ஊராட்சி செயலர் பிச்சைமணி, வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். லட்சுமிபுரம் ஊராட்சியில் தலைவர் ஜெயமணி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் ராமலட்சுமி, ஊராட்சிச் செயலர் நந்தினி, வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சருத்துப்பட்டி ஊராட்சியில் தலைவர் சாந்தி கொடி ஏற்றினார். ஊராட்சிச் செயலர் லெனின், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
எருமலைநாயக்கன்பட்டியில் தலைவர் பால்ராஜ் கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சுசிலா, ஊராட்சி செயலர் பாண்டியராஜ் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் டாக்டர் செல்வராஜ் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சின்னராஜா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராம்சங்கர் கொடி ஏற்றினார். பொங்கல் விழா, இலக்கிய விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் கார்த்திகேயன், அழகர்ராஜா, மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பெரியகுளம் பிரசிடென்சி ஸ்கூல் ஆப் நர்சரி பிரைமரி பள்ளியில் தலைவர் கோபாலகிருஷ்ணன் கொடி ஏற்றினார். செயலர் ராஜ்குமார், பள்ளி முதல்வர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பெரியகுளம் விக்டரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளி தாளாளர் ராஜ்குமார் கொடி ஏற்றினார். பொருளாளர் சுகுமாரன், பள்ளி முதல்வர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தனர். மாணவ மாணவிகளின் பங்கேற்றனர்.
பெரியகுளம் டேவிட் துவக்க பள்ளியில் பள்ளி குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் கொடி ஏற்றினார். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.