சின்னமனூர்,- -சின்னமனூரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு கலெக்டர் முரளீதரன் நேற்று காலை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கலெக்டருடன் நகராட்சி தலைவர் அய்யம்மாள், கமிஷனர் கணேஷ் உள்ளிட்டோர் இருந்தனர். தொடர்ந்து வேப்பம்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றார்.